காருக்குள் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜயின் மகன்.. திடீரென வெளியான வைரல் வீடியோ..!!

By Nanthini

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் சஞ்சய் தனது தந்தையை போலவே சினிமாவில் காலடி எடுத்து வைக்க தற்போது தயாராகி வருகின்றார். சமீபத்தில் கூட இவர் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். அதேசமயம் தற்போது சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் இவர் இயக்கம் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

   

முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட்டாகி உள்ள சஞ்சய் லைகா நிறுவனர் சுபாஷ்ரணை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்கள் வைரலானது. இதற்கு முன்பு சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளது கோலிவுட்டிற்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பாடலுக்கு காருக்குள் தனது ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் விஜயின் மகன் சஞ்சய் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தாலும் தற்போது திடீரென அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

FilmiFriday ™ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@filmifriday)

author avatar
Nanthini