ரேஞ்ச் ரோவர் முதல் Porsce கார் வரை… நடிகை சமந்தா வைத்துள்ள சொகுசு கார்கள் இத்தனையா…? லிஸ்ட் இதோ…

By Begam on ஏப்ரல் 30, 2024

Spread the love

2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. இதையடுத்து டோலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனார். இதையடுத்து தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து  முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

   

பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்த சமந்தா,  2017-ம் ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆனால் திடீரென நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அவரை விவாகரத்து செய்து பிரிந்து தற்பொழுது தனித்தே வாழ்ந்து வருகிறார்.

   

 

விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தாவின் மார்க்கெட் பல மடங்கு எகிறியுள்ளது. தற்பொழுது வரை பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 3 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் .நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை சமந்தா வைத்திருக்கும் சொகுசு கார்கள் குறித்தும், பிரம்மாண்ட வீட்டினை குறித்தும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் ஆடம்பரமான வீடு ஒன்றும் நடிகை சமந்தாவிற்கு உள்ளது. இதுமட்டுமின்றி மும்பையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 3BHK அபார்ட்மெண்ட் ஒன்றையும் வாங்கியுள்ளாராம் சமந்தா. நடிகை சமந்தாவிற்கு கார் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அவர், 2.26 கோடி ரூபாய் மதிப்புள்ள லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் முதல் போர்ஷே கேமன் ஜிடிஎஸ் வரை சொந்தமாக ஏராளமான கார்கள் வைத்து இருக்கிறார். அதில் குறிப்பாக லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் – ரூ 2.26 கோடி, Porsche Cayman GTS – ரூ 1.46 கோடி, ஜாகுவார் எக்ஸ்எஃப் – ரூ 72 லட்சம், Mercedes Benz G63 AMG – ரூ 3.30 கோடி, ஆடி க்யூ7 – ரூ 87 லட்சம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் – ரூ 1.70 கோடி போன்ற ஆடம்பர கார்களை வைத்துள்ளார் சமந்தா.