அஜித் இல்லை… ‘ஆசை’ படத்தில் முதன்முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகராம்… நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பன்னிடீங்களே…

By Begam on ஏப்ரல் 30, 2024

Spread the love

அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் 63 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

   

தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இப்படத்திற்கு Good Bad Ugly என்றும் பெயரிட்டுள்ளனர்.

   

 

இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகர் அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த ஒரு திரைப்படம் தான் ஆசை. 1995 ல் வெளியான இப்படத்தில் சுவலட்சுமி, ரோகினி, பிரகாஷ் ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஆசை திரைப்படம் அஜித் கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று என்றே சொல்லலாம். இப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.  இப்படத்திற்கு முதலில் நடிகர் அஜித்தை இயக்குனர் வசந்த் அவர்கள் தேர்வு செய்யவில்லையாம். நடிகர் அரவிந்த்சாமியை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தாராம். பின்னர் அவரது டேட் கிடைக்காத காரணத்தால் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.