நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் பட குழுவினர் நேற்று செகண்ட் சிங்கிள் ஷாட் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கின்றார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் இதில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கின்றார்.
இதில் இளம் விஜய் கதாபாத்திரத்திற்கு டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகி பாபு, நித்தின் சத்யா, சினேகா, மோகன், வைபவ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றது.
இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் அப்டேட்டுகளும் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது. இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிளான விசில் போடு பாடல் கடந்த சில மாதத்திற்கு முன்பு வெளியானது. இருப்பினும் இந்த பாடல் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை.
இந்த திரைப்படத்தில் மற்றொரு ஸ்பெஷலாக நடிகர் விஜய் இரண்டு பாடலை பாடியிருக்கிறார். ஒரே திரைப்படத்தில் இரண்டு பாடல் பாடியது இதுவே முதன் முறையாகும். நடிகர் விஜய் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் தொடர்பாக நேற்று ஒரு ஷார்ட் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் வெளியான காட்சிகள் மிகவும் அதிரடியாக இருந்தது.
அதைத் தொடர்ந்து இன்று மாலை 6:00 மணிக்கு நடிகர் விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரணி குரலை ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டு வந்து ஒரு பாடலை வடிவமைத்து இருக்கின்றார் இசையமைப்பாளர் யுவன். அது இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் பாடல் சொதப்பிய நிலையில் இரண்டாவது பாடலாவது நல்ல வரவேற்பை பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் நடிகர் விஜய்க்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.