அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு போர் தொழில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் போர் தொழில் படம் சூப்பர் ஹிட் ஆனது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் செல்வன் நடிப்பில் ஒரு புதிய படத்தை விக்னேஷ் ராஜா இயக்க போவதாக கூறப்பட்டது ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள படத்தை விக்னேஷ் ராஜா இயக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கொரோனா குமார் என்ற படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு சிம்புவுக்கு 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டது.
இதில் 4.5 கோடி ரூபாய் முன்படமாக கொடுக்கப்பட்டது. அந்த பணத்தை பெற்றுக்கொண்டு படப்பிடிப்புக்கு வராததாக கூறி சிம்பு மீது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. கடைசியாக தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் தனுஷ் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோக இளையராஜாவின் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.