தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சினேகா, லைலா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, பிரபு யோகி பாபு, மைக் மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயும் அஜித்தும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
ஆரம்ப காலகட்டத்தில் இருந்து சினிமாவில் பல விமர்சனங்களை சந்தித்து இருவரும் தங்களது சொந்த உழைப்பில் முன்னேறியுள்ளனர். கடந்த 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் காதல் கோட்டை திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடித்தார். தேவயானி ஹீரோயினாக நடித்தார். ஹீரோ ராசகோபால், கரன், மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
காதல் கோட்டை படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஆனால் அகத்தியன் முதலில் விஜயைbதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்தார். இது குறித்து விஜயின் அப்பா சந்திரசேகரிடம் சென்று இயக்குனர் கேட்டுள்ளார். அப்போது விஜய் வேறு ஒரு படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் ஆறு மாதம் கழித்து இந்த படம் எடுப்பதை பற்றி பார்க்கலாம் என ஏ சந்திரசேகர் கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு தான் அகத்தியர் விஜய்க்கு பதிலாக அஜித்தை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார். படமும் சூப்பர் ஹிட் ஆனது.