“விஜய் படம் இருக்கும் இடத்தில் அமர மாட்டேன்” சோபாவில் தஞ்சமடைந்த திமுக மேயர்… நெல்லையில் வெடித்த புது சர்ச்சை..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

நெல்லை மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் வைக்கப்படாததை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக, மேயர் ராமகிருஷ்ணனின் இருக்கைக்கு மேல் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் அதிகாரப்பூர்வமாக மாட்டப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த திமுக மேயர் ராமகிருஷ்ணன், தனது முக்கிய இருக்கையில் அமர மறுத்துவிட்டு, அலுவலகத்தில் உள்ள சோபாவில் அமர்ந்து தனது பணிகளைக் கவனித்து வருகிறார். இது குறித்துக் கேட்டபோது, “எனக்கு இங்கு அமர்ந்து பணிபுரிவதுதான் பிடித்திருக்கிறது” என அவர் பதிலளித்துள்ளது நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் (MLA) முன்னிலையிலேயே, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்துடன் மேயர் ராமகிருஷ்ணன் மாமன்றக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற செயலை எதிர்க்கட்சியினர் தங்களது ஆட்சிக் காலத்தில் செய்திருந்தால், இந்நேரம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எனப் பெரிய அளவில் சர்ச்சை கிளப்பப்பட்டிருக்கும் என்று த.வெ.கவினர் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.