பரபரப்பு..! அந்த ஒரு விஷயத்துக்காகத் தான் திமுக அடித்த கமிஷனை சொல்லல… உண்மையை அம்பலப்படுத்திய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம்தாகூர்..!!

By Soundarya on ஆனி 8, 2026

Spread the love

சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர், கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவின் தற்போதைய செயல்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். உண்மையான திமுக தொண்டர்கள் அனைவரும் தற்போது புறக்கணிக்கப்பட்டு வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றும், வசூலுக்காகப் புதிதாகக் கட்சிக்குள் வந்தவர்களை வைத்துக்கொண்டுதான் தற்போது திமுக நடத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துப் பேசிய அவர், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சீமானுக்குச் சீர் கொண்டுபோன போதே அவர்களுக்குள் ஏதோ ஒரு ‘டீலிங்’ நடப்பது தெரிந்துவிட்டது என்றார். சீர் என்ற பெயரில் பெட்டி சென்றதால்தான் சீமான் தற்போது இவ்வாறு பேசி வருகிறார் என்றும், தேர்தல் கொடுத்த அதிர்ச்சியால் உதயநிதியிடம் இருந்து வந்த புலம்பல் தற்போது சீமானிடம் இருந்து வருகிறது என்றும் சாடினார்.

   

மேலும், திமுக தயவில் பெற்ற எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற சீமானின் சவாலுக்குப் பதிலடி கொடுத்த மாணிக்கம்தாகூர், காங்கிரஸ் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற உதயநிதியை முதலில் ராஜினாமா செய்யச் சொன்னால் தானும் ராஜினாமா செய்யத் தயார் எனச் சவால் விடுத்தார். சொந்த மாவட்டத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாத சீமான் நாக்கை அடக்கிப் பேச வேண்டும் என்றும், கூட்டணி தர்மத்திற்காகவே திமுக அடித்த கமிஷன்களைத் தான் இதுவரை வெளியில் சொல்லவில்லை என்றும் அவர் காரசாரமாகக் குறிப்பிட்டார்.