கரூர் துயரம் எதிரொளி… தமிழகத்தில் இனி… விஜய் போட்ட முக்கிய உத்தரவு…!

By Nanthini on ஐப்பசி 5, 2025

Spread the love

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் அரசு சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை ஒட்டி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய விஜய் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது மக்களுக்கு இடையூறாக எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகே கட்சி நடவடிக்கைகளை தன் தொடர இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளாராம். விரைவில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.