ஈரோடு மாவட்டம் காசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமாருக்கு சுமிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. சுமிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவரும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமாரின் மனைவி ரேவதி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் சுமிதாவுடன் பேசமாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்த ராஜ்குமார் வேலைக்கு சென்றார்.
அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. என்னவென்றால் ராஜகுமாரும் சுனிதாவும் கோவையிலிருந்து சேலத்திற்கு பேருந்தில் வந்துள்ளனர். இருவரும் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் இருந்து இறங்கியதும் இருவரும் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது.
