காலையிலேயே ஷாக்… மதுரை மாநாட்டால் விஜய்க்கு வந்த புதிய சிக்கல்… போலீசில் பரபரப்பு புகார்…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்ட வருகின்றன. அதன்படி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் மதுரையில் பிரம்மாண்டமாக இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தி முடித்தார். இந்நிலையில் மதுரையில் நடந்த மாநாட்டுக்குச் சென்ற மதன் என்பவர் ஆகஸ்ட் 27ஆம் தேதி துவரங்குறிச்சி அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனால் மதனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்த கோரி அவரது சகோதரர் சீனிவாசன் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Youtube முக்தார் அழைப்பின் பேரில் சபீர் என்பவர் மதனை அழைத்துச் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது விஜய்க்கு புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.