கோவை மக்களே ரெடியா?… உங்க ஊரிலும் வருகிறது மெட்ரோ ரயில் சேவை… முதல் டிரிப் எந்த ரூட்டில் தெரியுமா…?

By Srimathi on புரட்டாதி 3, 2025

Spread the love

சென்னையில், பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருவதைப் போல பூந்தமல்லி – போரூர் வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மழை & வெள்ள காலங்களில் மக்களுக்கு கை கொடுக்கவும், மெட்ரோ ரயில் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதே போல் கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதில் முதல் கட்டமாக, கோயம்புத்தூர் சந்திப்பில் இருந்து வாலியம்பாளையம் பிரிவு வரை, முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இதனுடைய மொத்த நீளம் 40 கிலோ மீட்டர் மற்றும் இதன் மதிப்பீடு செலவு ரூ. 10,740 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இது போகும் வழித்தடங்களில் சர்வே பணிகள், நடைபெற்று வருவதாக கோவை எம்பி கணபதி பி. ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் வடகோவை போத்தனூர் ரயில் நிலையங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்பட ரயில்வே வாரியம் திட்டமிடுவதாக அவர் தெரிவித்தார். இரவு நேரங்களில் கோவை – பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், கோவை – ஈரோடு மெமு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.