சென்னை மக்களே குட் நியூஸ்… உங்க நீண்ட கால கனவு நிறைவேற போகுது… துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..!!!

By Divyamayakannan on புரட்டாதி 3, 2025

Spread the love

சென்னையில்  போக்குவரத்து நெரிசல் காரணங்களாகவும், மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை ஏற்படுவதாலும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள் கட்டி வருகின்றன. நொளம்பூர்-மதுரவாயல் கூவம் ஆற்றில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலை இணைக்கும் படி பாலம் அமைக்க போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ரூ. 31.65  கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பால பணி நிறைவடைந்துள்ளது. இருவழிப் பாதையாக 120 மீட்டர் நீளமுள்ள பாலமாக உள்ளது. வேலை முடிமையடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாரான நிலையில் உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அடுத்த வாரத்தில் பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். மிக முக்கிய போக்குவரத்து நிலைபாலமாக அமைக்கப்பட்டுள்ளது.

   

ஏற்கனவே அந்த இடத்தில் சிறுபாலங்கள் இருந்தன மழைக்காலத்தில் வெள்ளம் அதிகரித்து மக்கள் அப்பகுதிக்குச் செல்ல சிரமமாக இருந்தது. மக்களின் சிரமத்தை குறைக்கவே புதிய பாலத்தை கட்டியுள்ளனர். பல நாட்களாக பொதுமக்களுக்கு இருந்த பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளனர். இதைக் குறித்து வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் பேசியுள்ளார். இந்தப் புது பாலத்தினால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பயன் அடைவார்கள். நீண்ட நாள் மக்களின் கோரிக்கையை தீர்த்து வச்சாச்சு.