விஜயை கவர்ந்த அரசியல் தலைவர்.. அவர் செய்ததை நினைத்து வியந்து போன தளபதி..!!

By admin on ஆனி 7, 2024

Spread the love

தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபு, பிரசாந்த், சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்டார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

காமராஜர் பிறந்தநாளில் தொடங்கப்படும் "விஜய் பயிலகம்"! அதுவும் 234 தொகுதிகளிலும்.! அதிரடி அறிவிப்பு | Thalapathy Vijay Payilagam to be started across Tamil Nadu on Kamarajar ...

   

வருகிற செப்டம்பர் மாதம் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. தனது 69 ஆவது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுவதும் அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கி உறுப்பினர்களை சேர்த்தார். விஜய்க்கு பிடித்த ஒரு அரசியல் தலைவர் யார் என்றால் அது கர்மவீரர் காமராஜர் தானாம்.

   

Thalapathy Vijay Payilagam: காமராஜர் பிறந்த நாளில் 'தளபதி விஜய் பயிலகம்'-அதிகாரப்பூர்வ அறிவிப்பு-thalapathy vijay payilagam on kamarajar birth anniversary official announcement - HT Tamil ...

 

காமராஜர் மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார். அவர் மக்களுக்கு ஆற்றிய நற்பணிகள் ஏராளம். சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் அரசியலில் முழு ஈடுபாடோடு களமிறங்க உள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் விஜய் வெளியூர்களுக்கு கார்களில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு ஊரின் இயற்கை அழகையும் பார்த்துக் கொண்டே செல்வாராம். சில நேரம் காரில் இருந்து இறங்கி பொதுமக்களுடன் பேசுவார்.

ஆகா.. விஜய் பேசுறத பார்த்தீங்களா.. பூரிக்கும் விடுதலை சிறுத்தைகள்! அம்பேத்கர், பெரியார், காமராஜரா? | VCK leaders wishes and comment Actor Vijay speech regarding Ambedkar ...

அப்படி பேசும் போது இங்கிருக்கும் குளம் காமராஜர் வெட்டியது, அங்கு இருக்கும் அணை காமராஜர் கட்டியது என அவரை பற்றி தான் மக்கள் பேசுவார்களாம். அதிலிருந்து விஜய்க்கு காமராஜர் என்றால் மிகவும் பிடிக்குமாம். இந்த காலத்தில் ஏராளமான தொழில்நுட்பங்கள் இருக்கிறது. ஆனால் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக இல்லாத காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனைகளை காமராஜர் எப்படி நிகழ்த்தி காட்டியிருப்பார் என விஜய் வியந்து பார்த்த நாட்கள் உண்டு. இந்த தகவலை நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

Thalapati Vijay Payalakam" from Kamaraj's birthday - 15th July! | காமராஜர் பிறந்தநாளான ஜூலை -15 முதல் "தளபதி விஜய் பயிலகம்" !