நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் ஆனந்த் செல்வன் புது வீடு கட்டி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. வெள்ளித்திரையில் இருக்கும் ஹீரோக்களுக்கு நிகராக சின்னத்திரையில் இருக்கும் நடிகர்களையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு பேராதரவை கொடுத்து வருகிறார்கள்.

தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல சேனல்கள் புதுப்புது களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றது. புது முக நடிகர்களும் அறிமுகமாகி கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஜீ தமிழில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், அதில் மக்களுக்கு மிகப் பிடித்த சீரியலாக இருந்தது நினைத்தாலே இனிக்கும். இந்த சீரியல் இதுவரை 900 எபிசோடுகளை கடந்துள்ளது.
இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் தான் ஆனந்த் செல்வன். அவருக்கு ஜோடியாக சுவாதி ஷர்மா நடித்த வருகின்றார். மேலும் இந்த தொடரில் நேத்ரா, ராணி, சுரேஷ், ஹேமா, ஸ்ரீகாந்த், தீபா நேத்ரன், டாக்டர் ஷர்மிளா மற்றும் அரவிந்த் கதரே உள்ளிட்ட பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலை மான் ஸ்டுடியோ தயாரித்து வருகின்றது.

இந்த சீரியலில் ஹீரோவாக கலக்கி வரும் ஆனந்த் செல்வன் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோவாக நடித்தவர் இவர்தான். அதனை தொடர்ந்து தான் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் நடித்திருக்கின்றார். தற்போது ஆனந்த் செல்வன் புது வீடு வாங்கி இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது நடிகர் ஆனந்த் செல்வன் சொந்தமாக புது வீடு கட்டி குடியேறி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

