தமிழ் சினிமாவில் 80, 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்த செந்தில் மனைவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் செந்தில். அதனை தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்தபடியான பேர் இவருக்கு கிடைக்கவில்லை.
அதனை தொடர்ந்து கவுண்டமணியுடன் சேர்ந்து இவர் நடிக்க தொடங்கியதற்கு பிறகு இரண்டு பேரின் காம்போவும் மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் என ஏராளமான திரைப்படங்கள் இன்றளவும் செந்தில் மற்றும் கவுண்டமணியின் காமெடிகளில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கின்றது.
அதிலும் கவுண்டமணி செந்திலை அடிக்கும் போதெல்லாம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் நடித்து அதிக அளவு ஸ்கோர் செய்தார். செந்திலின் பலத்தில் ஒன்றை அவரது வெகுளித்தனமான பேச்சு. ஊர்காரர் ஒருவர் போல் இருக்கும் அவரை பலரும் ஏற்றுக் கொண்டனர். அதிலும் கவுண்டமணியிடம் அவர் கேட்கும் சந்தேகங்கள் அதற்கு கவுண்டமணி கொடுக்கும் பதில் எல்லாம் சிரிப்பலையை ஏற்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் கவுண்டமணியும் செந்திலும் பிரிந்து கூட நடிக்க தொடங்கினார்கள். தொடர்ந்து படங்களில் வாய்ப்பு குறைந்ததன் மூலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிய செந்தில் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மூலமாக ரிஎன்றி கொடுத்தார். பின்னர் கடைசியாக லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் செந்தில் மனைவி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அவர் கூறியதாவது “எங்கள் திருமணத்தில் இருந்து தான் எங்கள் ஊரில் பெண் பார்க்கும் படலம் என்பதே தொடங்கியது. சொந்த ஊருக்குள்ளேயே தான் பெண் கொடுத்து எடுத்துக் கொள்வார்கள். எனது கணவர் மட்டும் தான் மற்ற ஊரில் இருந்து வந்து என்னைப் பெண் பார்த்து திருமணம் செய்து கொண்டார். கோடிக்கணக்கில் ரூபாய் சம்பாதித்தாலும் அவர் பண விஷயத்தில் ரொம்ப வீக்கு.
அவருக்கு பணத்தை என்ன கூட தெரியாது. நான் தான் அனைத்தையும் கவனிப்பேன். அதனால் திருமணம் முடிந்ததும், அவரது அப்பா என்னிடம் அவர் பண விஷயத்தில் ரொம்பவே வீக் . நீதான் பார்த்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுவர் .ஆனால் சில சமயங்களில் பணத்தை எடுத்துக் கொண்டுதான் கொடுப்பார். அதாவது யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மீத பணத்தை தான் என்னிடம் கொடுப்பார்” என்று அவரின் மனைவி கலைச்செல்வி பேசியிருந்தார்.