நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் நடிகர் அஜித் குமாரும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை பார்ப்பதற்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் 250 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் முடிந்த பாடே இல்லை. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் அஜித் அடுத்த திரைப்படத்தை கமிட் செய்வார்.
ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக அஜித் அஜர்பைஜான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அஜர்பைஜானில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்த பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றார்கள். படம் வரும் 20-ம் தேதியிலிருந்து அஜர்பைஜான் விடாமல் சூட்டிங் நடைபெற உள்ளது, இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் குமார் மற்றும் திரிஷா, ரெஜினா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த அப்டேட் விடாமுயற்சி குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்த அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடாமுயற்சியின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் ஜப்பான் சென்று குட் பேட் அக்லி பட குழுவினருடன் இணைய இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்தின் மகனாக மலையாளத்திலும் தமிழிலும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்த பிரேமலு படத்தின் கதாநாயகன் நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அஜித், ரசிகர்களுக்கு தீபாவளிக்கும் பொங்கலுக்கும் ட்ரீட் வைக்க இருக்கின்றார் என பலரும் கூறி வருகிறார்கள்.