நடிகை சுனைனா தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கடந்த 25 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான குமார் vs குமாரி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான சுனைனா தமிழில் அறிமுகமான திரைப்படம் காதலில் விழுந்தேன். நகுலுக்கு ஜோடியாக இவர் நடித்த அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னதாக சிவாஜி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் சங்கர் அந்த பகுதியை வெட்டி எடுத்து விட்டார்.
அறிமுகமான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து நக்குலுடன் சேர்ந்து மாசிலாமணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் வம்சம், யாதுமாகி, பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, கவலை வேண்டாம், தொண்டன், என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பெருமளவு காதல் கிசுகிசுக்களில் சிக்காத ஒரே நடிகை சுனைனா. முதன்முதலாக நக்குலுடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்த போது காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில் பின்னர் தனது நகுல் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்கு போராடி வந்த நடிகை சுனைனா கடைசிவரை பெறாமலே போய்விட்டார்.
தற்போது அவருக்கு 35 வயதாகின்றது. இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார் போல கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்து லாக் என்பதை உணர்த்த அதுபோன்ற எமோஜியை பதிவிட்டு இருந்தார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நடிகை சுனைனா காதலில் விழுந்து விட்டார் என்று கூறி வந்தார்கள். இந்நிலையில் அதை விளக்கும் வகையில் தனக்கு நிச்சயதார்த்தமான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நான் இதற்கு முன்பாக பகிர்ந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பலவிதமான தகவல்களை கூறி வந்தார்கள். அதனை விளக்க விரும்புகிறேன். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்று கூறியிருந்தார். இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.