தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இந்த அறிவிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய “சீலிங்” (கடன் வரம்பு) முறை, ஒட்டுமொத்த குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தலுக்கு முன்பாக தவெக வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு, சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை மிகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.
தேர்தல் பிரச்சாரங்களின் போது, “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தும் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்; இது வெறும் வாக்குறுதி அல்ல, உத்தரவாதம்” என்று முதலமைச்சர் விஜய் மேடைகளில் முழங்கியிருந்தார். ஆனால், நேற்று வெளியான தள்ளுபடி அறிவிப்போ முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக, நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொள்ளாமல், விவசாயிகள் பெற்ற ‘கடன் தொகையின்’ அடிப்படையில் தள்ளுபடி வரம்பு (Ceiling) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ₹50,000 வரை மட்டுமே கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழுமையான தள்ளுபடி கிடைக்கும் என்றும், ₹1 லட்சத்திற்கும் அதிகமாகக் கடன் பெற்றிருக்கும் விவசாயிகளுக்கு வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதுள்ள சூழலில், இரண்டு அல்லது இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்யக்கூடிய ஒரு விவசாயி சராசரியாக ₹3 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். உதாரணமாக, ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு ₹60,000-மும், நெல் சாகுபடிக்கு ₹36,000-மும் வங்கிகள் கடனாக வழங்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கு மேல் கடன் உள்ளவர்களுக்கு வெறும் ₹5,000 மட்டுமே தள்ளுபடி என்று அறிவித்திருப்பது தங்களை எள்ளி நகையாடுவது போல் உள்ளதாக டெல்டா பாசன விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறுகையில், கடந்த காலங்களில் மத்திய, மாநில அரசுகள் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்தபோதெல்லாம் இந்த மாதிரியான ‘சீலிங்’ முறைகள் கிடையாது என்றும், இந்த அறிவிப்புக்காக அரசு கூடுதலாக ₹2,000 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல் என்றும் சாடியுள்ளார்.
அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே விவசாயிகளின் மிக முக்கியப் பிரச்சினையில் தவெக அரசுக்கு எதிராக இந்த எதிர்ப்பலை எழுந்துள்ளதால், விவசாயிகள் தங்களின் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். நிலுவையில் உள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை முதலமைச்சர் விஜய் உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதி அளித்தபடி 5 ஏக்கருக்கு உட்பட்ட அனைத்து சிறு, குறு விவசாயிகளின் கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மீதமுள்ள கடன் நிலுவைகளை ஒத்திவைத்துவிட்டு, தற்போதைய சாகுபடிக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன்களை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுத்துள்ள கோரிக்கை தமிழக அரசியல் மற்றும் விவசாய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…