தோசை பார்சல் வாங்க வந்தவர் கொடுத்த பகீர்.. கண்ணில் மிளகாய் பொடியை தூவி நடந்த கொடூரம்… கதறிய ஹோட்டல் உரிமையாளர்..!!

Spread the love

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் ‘குமர விலாஸ்’ என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் – ஜெயந்தி தம்பதியினரிடம், ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வந்த வாலிபர் ஒருவர் தோசை பார்சல் கேட்டுள்ளார். அவர்கள் பார்சல் கட்டும் பணியில் பிஸியாக இருந்தபோது, அந்த வாலிபர் திடீரென தம்பதியினரின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியுள்ளார். பின்னர் ஜெயந்தி அணிந்திருந்த 20 கிராம் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட தம்பதியினரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், அந்த வாலிபரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். அப்போது, “என்னை பிடித்தால் கத்தியால் குத்திக் கொள்வேன்” என மிரட்டிய அந்த வாலிபர், தன் கையையும் கத்தியால் அறுத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிதம்பரம் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும், தான் வாங்கிய கார் கடனுக்கான மாதாந்திரத் தவணையைச் செலுத்தப் பணம் தேவைப்பட்டதால் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

ஆங்கிலேயர்கள் போட்ட தப்பு கணக்கு… இந்தியா – நேபாள எல்லையில் இத்தனை ஆண்டுகாலமாக நடக்கும் கூத்து இதுதானா?… பிரதமர் பாலன் ஷா சொன்ன ‘அந்த’ ஒரு உண்மை….!

லிபுலேக், லிம்பியதுரா மற்றும் காலாபானி ஆகிய எல்லைப் பகுதிகள் தொடர்பாக இந்தியா மற்றும் நேபாளம் இடையே நீண்ட காலமாகவே எல்லைப்…

1 minute ago

அந்த கத்திய எடு.. அவன கார்ல ஏத்து.. கூலி தொழிலாளியைத் தாக்கிய தவெக நிர்வாகி.. வீடியோ வைரல்… CM விஜய் அதிரடி ஆக்‌ஷன்…!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், புதிய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஒரு கட்டிட இடிப்பு தளத்திற்கு மே 28ஆம் தேதியன்று இரவு,…

5 minutes ago

“கைக்கூலிகளை வச்சு நாடகம் ஆடாதீங்க”… அதிமுக தொண்டரின் மரணத்திற்கு பின்னணியில் தவெக… பொங்கி எழுந்த ஆர்.பி.உதயகுமார்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் 'பூக்கடை' மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள்…

8 minutes ago

பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை சுவரில் மோதி கொன்ற கொடூரன்..! தாயை திருமணம் செய்ய குழந்தை தடையாக இருந்ததால் வெறிச்செயல்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, குடும்பப் பகை மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் ஒரு வயது ஆண் குழந்தை கொடூரமான முறையில்…

11 minutes ago

தவெகவுக்கு ஆதரவு…. திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… முதல்வர் விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ போட்ட குண்டு….புதிய பரபரப்பு….!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி…

17 minutes ago

“ஆளுநருக்காக நாங்க ஏன் காக்கணும்..?” பிரசவ வலி மனைவியுடன் டிராஃபிக்கில் சிக்கிய கணவனின் ஆவேசக் கேள்வி…! நெட்டிசன்கள் கடும் கொந்தளிப்பு..!

ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…

23 minutes ago