தவெகவுக்கு ஆதரவு…. திமுக கூட்டணியில் இருந்து விலகல்?… முதல்வர் விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ போட்ட குண்டு….புதிய பரபரப்பு….!

Spread the love

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காக முதல்வர் விஜய் இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ நேரில் வந்து முதல்வர் விஜய்யை வரவேற்றார். விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அவர் சிரித்தபடி உற்சாகமாக வரவேற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பும் வகையிலான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “துரதிர்ஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம். அதன் காரணமாகவே எங்களால் தவெகவை ஆதரிக்க முடியாத சூழல் ஏற்பட்டது,” என்று ஓப்பனாகப் பேசினார். மேலும், மதிமுக என்பது ஒரு தனி இயக்கம் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலில் தவெகவை ஆதரிக்க முடியாமல் போனதற்கான காரணத்தையும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த துரை வைகோ, “திமுக கூட்டணியில் தொடர்வதா இல்லை வெளியேறுவதா என்று கேட்கிறீர்கள். அதைப்பற்றி எங்கள் கட்சியின் பொதுக்குழுவில்தான் விவாதித்து முடிவு எடுக்கப்படும்,” என்று அதிரடியாகத் தெரிவித்தார். துரை வைகோவின் இந்த அதிரடிப் பேச்சு, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விரைவில் வெளியேறப் போகிறதா என்ற பலத்த சந்தேகத்தையும், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago