“கைக்கூலிகளை வச்சு நாடகம் ஆடாதீங்க”… அதிமுக தொண்டரின் மரணத்திற்கு பின்னணியில் தவெக… பொங்கி எழுந்த ஆர்.பி.உதயகுமார்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளைச் சேர்ந்த அதிமுக வர்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளர் ‘பூக்கடை’ மகேந்திரன், தொடர் தேர்தல் தோல்விகள் மற்றும் உட்கட்சி மோதல்களால் மனமுடைந்து, கட்சியில் ஒற்றுமையை வலியுறுத்தி உருக்கமான காணொளி ஒன்றை வெளியிட்டு ஜூன் 1ஆம் தேதி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த அதிமுகவினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகேந்திரனின் குழந்தையின் முழு கல்விச் செலவையும் ஏற்பதோடு, கட்சியின் சார்பில் 55 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தத் தற்கொலைக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்தி வரும் அரசியல் நாடகங்களே காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார். எந்தவொரு பதவி சுகத்தையும் அனுபவிக்காத உண்மை விசுவாசியான மகேந்திரன், கழகத்தைக் காப்பதற்காகவே தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார் என்று குறிப்பிட்ட உதயகுமார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடியார் மீது தொண்டர்கள் வைத்துள்ள பற்று வெறும் வார்த்தைகள் அல்ல, அது வரலாறு என்பதை மகேந்திரனின் மரணம் நிரூபித்துள்ளதாகக் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

விஜய்யை நேரடியாக எச்சரிக்கும் தொனியில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “ஆட்சி, அதிகாரம், பணம் மற்றும் கொள்ளையில் பங்கு தருவதாகக் கூறி, தங்களின் கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அதிமுகவின் உண்மைத் தொண்டர்களை இனிமேலும் விலை பேச வேண்டாம்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நடத்தி வரும் இந்த அதிகார நாடகத்திற்கு இப்போது ஒரு அப்பாவித் தொண்டனின் உயிர் பலியாகியிருக்கிறது என்றும், பதவியும் பணமும் காட்டி அதிமுக விசுவாசிகளை ஒருபோதும் அசைக்க முடியாது என்பதை இந்தத் தியாகத்தின் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, “ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது, காலம் மாறும், காட்சிகள் மாறும்” என்று விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ள உதயகுமார், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் எழுச்சி பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று முழங்கியுள்ளார். கழகத் தொண்டர்களின் உணர்ச்சிகளை மேலும் தூண்டி விளையாட வேண்டாம் என்றும், இந்த அதிகாரக் கூத்துகளுக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், இல்லையெனில் அதன் விளைவுகள் மிக விபரீதமாக இருக்கும் என்றும் அவர் தனது கண்டன அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

3 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

28 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

37 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

42 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

48 minutes ago