ஒடிசாவில் அதிர்ச்சி.. காதலை நிராகரித்த பெண்.. ஆபீஸின் லேடிஸ் டாய்லெட்டில் ஸ்பை கேமரா வைத்த அதிகாரி கைது…!

Spread the love

ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை எழுத்தர் , தன் சக பெண் ஊழியர் ஒருவரை காதலிப்பதாகக் கூறி விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பெண் அவரது காதல் விருப்பத்தை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய், அந்தப் பெண்ணின் மீது கொண்ட கோபத்தால் அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்றை பொருத்தியுள்ளார்.

இந்த ரகசிய கேமராவை ஆன்லைனில் வாங்கிய சஞ்சய், யூடியூப் மூலம் அதை எவ்வாறு கையாள்வது என்று கற்றுக்கொண்டுள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பெண்கள் கழிவறையில் அதை ரகசியமாகப் பொருத்தி, அங்கு பதிவாகும் காட்சிகளைத் தனது மொபைல் போன் மூலம் பார்த்து வந்துள்ளார். மேலும், அந்த கேமராவின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக வாரம் ஒருமுறை அதை எடுத்து, மீண்டும் கழிவறையிலேயே ரகசியமாகப் பொருத்தி இந்த அதிர்ச்சிகரமான செயலைத் தொடர்ந்து செய்துள்ளார்.

பெண் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் தீர்த்தோல் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி சஞ்சய்யை கைது செய்தனர். அவரிடமிருந்து ரகசிய கேமரா, மொபைல் போன், பென் டிரைவ் மற்றும் சிசிடிவி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் மாவட்ட நிர்வாகம் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது. மேலும், அவர் பதிவு செய்த வீடியோக்களை வேறு யாருக்கும் பகிர்ந்தாரா என்பது குறித்து அறிய பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Swetha

Recent Posts

நாங்க கொத்தடிமைகள் தான்..! ‘உபி, கொத்துஸ் வார்த்தைகள்.. இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க..? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் பெருவாரியாகச்…

1 minute ago

BREAKING: திமுக கூட்டணியில் மதிமுக விலகல்… ஜூன் 27-ல் அரங்கேறப்போகும் அதிரடித் திருப்பம்… பரபரப்பு தகவல்….!

தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக விலகக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

விஜய்க்கு பாஜக வைத்த ‘ஆபரேஷன் ரேடார்’ ஆப்பு… கசிந்த ரகசிய ஃபைல் விபரங்கள்… டெல்லியின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ பிளான்….!

தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

8 minutes ago

“பேப்பர் லீக்கால் மாணவர்கள் வாழ்க்கை நாசமாகுது.. ஆனா இவரு  மோடி மாம்பழம் தோட்டம் பத்தி பேசுறாரு..! பவன் கேரா எழுப்பிய சர்ச்சை கேள்வி…!

நாட்டில் நீட் (NEET), சிபிஎஸ்இ (CBSE), சிஇயுஇடி (CUET) போன்ற முக்கியப் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்து வரும் விவகாரம்…

10 minutes ago

“அரசியல்ல முகவரியே இல்லாம அழியணும்”… எம்.ஜி.ஆர், ஜெ. படங்கள் முன் சூடம் ஏற்றி சாபமிட்ட முன்னாள் சேர்மன்… அதிமுகவில் அடுத்த பரபரப்பு…!

சிவகங்கை மாவட்ட முன்னாள் ஊராட்சிக் குழு தலைவரும், அதிமுகவின் மாநில அம்மா பேரவை துணை செயலாளருமான பொன்.மணி பாஸ்கரன், அதிமுகவிலிருந்து…

18 minutes ago

நாங்க அப்பவே சொன்னோம்.. இப்ப அப்படியே நடந்துடுச்சு…. “2 மாசத்துல கிளம்புங்க!” – 17 வருஷ பார்ட்னர கழட்டிவிட்ட ஜெராக்ஸ்.. நடுரோட்டில் நிற்கும் HCL ஊழியர்கள்….!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப (IT)…

23 minutes ago