BREAKING: அடுத்த ஷாக்…. நள்ளிரவு முதலே விஜயகாந்த் வீட்டில் பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரேமலதா விஜயகாந்தின் வீடு மற்றும் தேமுதிக அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் வந்ததை தொடர்ந்து நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மோப்பநாய் உடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் விஜயகாந்த் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். பிறகு அது புரளி என தெரிய வந்தது. நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சமீபகாலமாகவே சென்னையில் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.