திடீர் திருப்பம்…. விஜய்யுடன் கூட்டணி?…. இபிஎஸ் தடாலடி அறிவிப்பு…..!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும் விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக மற்றும் அதிமுக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் பாஜக மற்றும் திமுகவை தங்கள் எதிரி என்று கூறிக் கொண்டிருக்க அது எப்படி சாத்தியமாகும் என்பதும் ஒரு பக்கம் கேள்விக்குறியாக தான் உள்ளது. இருந்தாலும் சமீபத்தில் கரூரில் நடைபெற்ற விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பாஜக விஜயை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கூட்டணிக்கு வந்தால் பாஜகவை அதிமுக கழற்றி விடுமா, விஜய் உடன் பேசினீர்களா என இபிஎஸ் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பு தெரியவரும் என இபிஎஸ் பதிலளித்தார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜயுடன் பேசவில்லை என்றும் ராமதாசுடன் என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.