300 நாட்களுக்கு மேல் ஓடிய கேப்டன் விஜயகாந்தின் இரண்டு படங்கள்… அடுத்தடுத்து கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்ஸ்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

ரஜினி, கமல் என இரு உச்ச நட்சத்திரங்கள் தங்கள் பாதைகளில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருந்த போது அவர்களுக்கு இணையாக பி செண்டரில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதும் தொலைக்காட்சிகளில் விஜயகாந்தின் படங்கள் திரையிடப்பட்டால் அதை கண்ணிமைக்காமல் பார்க்கும் ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

   

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார்.

விஜயகாந்த் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் எவ்வளவோ ஹிட் படங்களைக் கொடுத்திருந்தாலும், இரண்டு படங்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் வைத்தன. அந்த படங்கள் ‘கேப்டன் பிரபாகரன்’ மற்றும் சின்னக் கவுண்டர் ஆகிய படங்கள்தான்,

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் 1991 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணி இயக்கத்தில் உருவானது. இந்த படம் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தின் வெற்றியால்தான் தனது மகனுக்கு பிரபாகரன் என்று பெயர்வைத்தார் விஜயகாந்த்.

அதற்கு அடுத்த ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னக் கவுண்டர். இந்த திரைப்படம்தான் அவர் திரையுலக வாழ்க்கையிலேயே அதிக் நாட்கள் ஓடியது என்ற சாதனைக்குரிய திரைப்படம். இந்த திரைப்படம் 315 நாட்களுக்கு மேல் ஓடியது.