எத்தனையோ கதாநாயகிகளை மாற்றினார்… ஆனால் இவரை மட்டும் மாற்றவேயில்லை- 25 ஆண்டுகளாக எம்ஜிஆரோடு பயணித்த கலைஞர்..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.

   

ஒரு கட்டத்தில் எம் ஜி ஆருக்கும் டி எம் எஸ்க்கும் இடையே ஒரு சிறு கருத்து மோதல் எழுந்த போது அவர் வேறு சில பாடகர்களை தனக்காக பாடவைத்தார். ஆனால் அதன் பின்னர் தனக்குப் பொருத்தமான பாடகர் டி எம் எஸ் தான் என்பதை உணர்ந்த எம் ஜி ஆர் மீண்டும் தனக்கு அவரையே பாடவைத்தார்.

எம் ஜி ஆருக்காக 1954 ஆம் ஆண்டு வெளியான மலைக்கள்ளன் படத்தில் முதல் முதலாக பாடினார் டி எம் எஸ். அந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும் அவருக்கு பாடிய டி எம் எஸ் எம் ஜி ஆரின் கடைசிப் படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை அவருக்காகப் பாடியுள்ளார். எம் ஜி ஆர் எப்போதும் தன் கூட நடிப்பவர்கள், இயக்குனர்கள், டெக்னீசியன்கள் ஆகியோரை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிக் கொண்டே இருப்பார்.

ஆனால் அவர் மாற்றாத ஒரே ஆள் டி எம் சௌந்தர்ராஜன்தான். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.