ஏன் இஸ்லாமில் ஹஜ் பயணம் முக்கியமானது ? இதோ ஹஜ் யாத்திரையின் வரலாறு

By Deepika

Published on:

இஸ்லாமியர்கள் வருடத்தில் ஒரு மாதம் இறைவனுக்கு நோன்பு இருப்பது வழக்கம். அவர்கள் ஐந்து வேலையும் தொழுவதும், நன்கொடைகள் வழங்குவது அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள். அவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஹஜ் சென்று வர வேண்டும் என விரும்புவார்கள். ஹஜ் என்பது சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா என்னும் இடத்தில் உள்ள இஸ்லாமியர்களின் புனித ஷேத்திரம்.

Haba

20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் எனும் புனித பயணமாக சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குச் சென்றுள்ளனர். இது மக்களை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தவும், இறைவனுக்கு அடிபணிவதில் ஆர்வமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.முஹம்மது நபி அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி அவர்கள் நடந்து சென்றப் பாதை மட்டுமில்லாமல், தூதுவர்களான ஆப்ரஹாம், இஸ்மேவேல் போன்றோரின் வழிமுறையாகவும் அமைந்துள்ளது.

   

7 முறை காபாவை வலம் வருவது, மேலும் சபா & மர்வா என்று சொல்லக்கூடிய இரண்டு மலைகளுக்கிடையே 7 முறை வலம் வருவது போன்ற கடுமையான உடல் உழைப்பைக் கொண்டுள்ளது தான் இந்த ஹஜ் பயணம்.

4000 வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வசிக்காத, வறண்ட ஒரு பாலைவனம் தான் மக்கா. இப்ராஹீமிடம்(ஆப்ரஹாம்), அவர் மனைவி ஹாஜாராவையும், குழந்தை இஸ்மாயீலையும் பாலஸ்த்தீனத்திலிருந்து, அரேபியாவில் கொண்டு வந்து விட்டு விடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். இறைக் கட்டளையை ஏற்று, மக்கள் நடமாட்டமில்லாத அரேபியாவில் இபுறாஹீம் அவர்கள் விட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

zam zam well

குழந்தை இஸ்மாயில் பசியினால் துடிக்கும்போது, தாய் ஹாஜரா ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணம் அங்கே இருந்த ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடிச் சென்று பார்க்கின்றார்கள். இறுதியில் இறைவனிடம் பிரார்த்தித்த நிலையில், குழந்தைக்கு அருகே மயக்கமடைந்து விடுகின்றார். இறைக் கட்டளையின்பேரில், வானவர் ஜிப்ரயில் மூலம் அங்கிருந்து மிகச் சிறந்த நீரூற்று வெளிப்படுகின்றது. நீர் பல வழிகளிலும் ஓட, ஹாஜரா கல்களையும் மண்ணையும் வைத்து “ஜம்ஜம்” என்று கூறியவாறே தடுக்க முயற்சிக்கின்றார். இதனைக் கொண்டு தான் இந்த நீரூற்று “ஜம்ஜம்” என்று அழைக்கப்படுவதாக ஒரு தகவலும் உண்டு.

கடுமையான பாலைவனத்தில் மிகச் சிறந்த நீரூற்று இவர்களின் வசம் வந்ததால் இதை வைத்து கடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்களிடம் உணவுகளை பரிமாற்றம் செய்து வந்தனர். 4000 வருடங்களுக்கு முன்பு, வறண்ட பாலைவனத்தில் உண்டான ஒரு நீரூற்று, இன்று வரை பல்லாயிரம் மடங்கு அதிகமாக பலனளித்து கொண்டிருப்பது, மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று.

Haj yatra

ஹஜ் முடிந்து வருபவர்கள், கேன்களில் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதை காணலாம். முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டு அருந்திப் பாருங்கள். இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. அன்று ஹாஜரா அவர்கள், இரன்டு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய சம்பவத்தை வருங்கால சந்ததிகள் நினைவு கூறும் விதமாகத் தான் மக்கா பயணம் செல்பவர்களின் அலுவல்களில் 7 முறை இரு மலைகளுக்கிடையே நடப்பதும் ஒன்று.

 

 

author avatar
Deepika