என்னுடைய கல்யாணம் இந்த வருடம் ? முதல்முறையாக திருமணம் குறித்து ஓப்பனாக பேசிய விஜய் தேவரக்கொண்டா

By Deepika on மார்ச் 30, 2024

Spread the love

நானி நடித்த எவடே சுப்ரமண்யம் என்ற படம் மூலம் மக்களுக்கு அறிமுகமானார் விஜய் தேவரக்கொண்டா. பெல்லி சூப்புலு என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய், அர்ஜுன் ரெட்டி படம் மூலம் புகழ்பெற்றார். கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் பல பெண்களின் மனதில் இடம் பிடித்தார். அதில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலே பாடல் இன்றும் பலரின் ரிங்டோனாக உள்ளது.

Vijay devarakonda and mrunal thakur in family star

தொடர்ந்து நோட்டா, டியர் காம்ரேட், லைகார், குஷி போன்ற படங்கள் மூலமாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் விஜய் தேவர்கொண்டா. இவர் நடிகர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட, அதோடு ரவுடி என்ற உடை பிராண்டையும் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ம்ருனாள் தாக்கூருடன் இவர் இணைந்து நடித்துள்ள பேமிலி ஸ்டார் படம் வரும் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது.

   
   

Vijay devarakonda about his marriage

 

இதன் ப்ரோமோஷன் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய் தேவரக்கொண்டா. அப்போது ஒரு பேட்டியில் அவரிடம் உங்களது திருமணம் இந்த வருடம் என கூறப்படுகிறதே, அது உண்மையா என கேட்ட கேள்விக்கு ஜாலியாக பதில் அளித்துள்ளார் விஜய் தேவரக்கொண்டா. அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் இதையே தான் சொல்கிறார்கள். எனக்கு சிரிப்பாக இருக்கிறது. நான் கல்யாணம் செய்ய வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் தான் ரொம்ப ஆசைப்படுகிறார்கள்.

Vijay devarakonda and Rashmika mandanna in maldives

அது கண்டிப்பாக நடக்கும் ஆனால் இந்த வருடம் இல்லை, அதை என்னால் தெளிவாக கூற முடியும் என கூறியுள்ளார். இதை பார்த்த பலரும், ஆம் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார் அதனால் இந்த வருடம் கல்யாணம் இல்லை என விஜய்யை கலாய்த்து வருகிறார்கள். கீதா கோவிந்தம் டியர் காம்ரேட் படங்களில் இணைந்து நடித்த இந்த ஜோடி நிஜத்தில் காதலித்து வருகிறார்கள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்று வருவது குறிப்பிடத்தக்கது.