விஜயகாந்தின் பன்ச் வசனங்களுப் பின் இருந்த இவரைப் பற்றி தெரியுமா?… சும்மா க்ளாப்ஸ் அள்ளும்!

By vinoth on சித்திரை 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

   

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். 2000 களுக்குப் பிறகு அரசியலுக்கு சென்ற அவர் சினிமாவில் நடிப்பதைக் குறைத்தார். உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 2023 ஆம் ஆண்டு மறைந்தார். அது இன்னமுமே தமிழ் சினிமா ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

   

90 களில் விஜயகாந்த் படங்களை ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடக்கலாம். நேர்மையான போலீஸ் அதிகாரி அல்லது ராணுவ வீரர். அநியாயத்துக்கு எதிராக போராடும் கோபக்கார இளைஞராகதான் பெரும்பாலானப் படங்களில் நடித்திருப்பார். அந்த படங்களில் விஜயகாந்த் ஸ்கோர் செய்யும் இரண்டு இடங்கள் ஆக்‌ஷன் காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும்தான்.

 

அந்த அனல் பறக்கும் வசனங்களுக்குப் பின்னால் இருந்தவர் கதாசிரியரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான்தான். விஜயகாந்தின் பல படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ள லியாகத் அவரை வைத்து ‘ஏழை ஜாதி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் விஜயகாந்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். ஆனால் விஜயகாந்தின் மரணத்துக்குப் பிறகு அவர் தன் மேல் வைத்திருந்த அன்பைப் பல இடங்களில் பகிர்ந்து வருகிறார்.