Connect with us

CINEMA

தனுஷ் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக சென்று அவரது குடும்பத்திற்கு மிக பெரிய உதவியை செய்த விஜயகாந்த்.. என்ன மனுஷன்-யா..

நடிகர் விஜயகாந்த் இன்று காலை இந்த மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். ஆனால் அவர் செய்த நற்செயல்களால் ஒவ்வொரு நிமிடமும் மக்கள் மனங்களில் வாழ்ந்துக்கொண்டே இருக்கிறார். அவர் நடித்த படங்களில், அவரை பற்றிய நினைவுகளில் எப்போதும் வாழ்ந்துக்கொண்டே இருப்பார் விஜயகாந்த் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. நடிகர் தனுஷின் அக்கா டாக்டராக சீட் வாங்கி கொடுத்ததே கேப்டன்தான் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதாவது கஸ்தூரிராஜா இயக்குநராக வளர்ந்துவந்த காலம், பெரிய வசதியிலோ, பொருளாதார பின்புலமோ இல்லை.

   

செல்வராகவன், தனுஷ் எல்லாம் சிறுவர்களாக இருந்த காலம் அது. அப்போது கஸ்தூரி ராஜாவுக்கு தனுஷ், செல்வராகவன் மட்டுமின்றி, இரண்டு சகோதரிகளும் உண்டு. அதில் விமலகீதா என்பவர் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க 5 மதிப்பெண் குறைவாக இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் அவரை சேர்க்க குடும்பத்தில் வசதில்லை.

இதுகுறித்து கஸ்தூரிராஜா குடும்பம் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளது. விமலகீதா அழுதபடி இருந்துள்ளார். அப்போது கஸ்தூரி ராஜா வீடு இருந்த உள்ள அந்த வீதி வழியாக ஏதோ வேலையாக விஜயகாந்த் காரில் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த அவரது அசிஸ்டென்ட் இதுதான் டைரக்டர் கஸ்தூரிராஜா வீடு என்று கூறியுள்ளார். அப்படியா, காரை அந்த வீட்டுக்கு விடு என்று கூறி அழையா விருந்தாளியாக கஸ்தூரிராஜா வீட்டுக்கு சென்றார் விஜயகாந்த்.

திடீரென வந்த விஜயகாந்தை அவசரமாக வரவேற்று உபசரித்துள்ளார் கஸ்தூரிராஜா. அவரது மகள் அழுதுக்கொண்டிருப்பதை பார்த்து விஜயகாந்த் விசாரிக்க முதலில் தயங்கிய கஸ்தூரி ராஜா நடந்த விஷயத்தை கூறியுள்ளார். இதற்கு ஏன் கவலைப்படறீங்க, அவங்க டாக்டருக்கு படிக்கட்டும் என்று சொல்லி, ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்திருக்கிறார் விஜயகாந்த்.

இப்போது அந்த விமலகீதா, அப்பல்லோ மருத்துவமனையில் மிகப்பெரிய சர்ஜனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கோடி கோடியாக தனுஷ், செல்வராகவன் சம்பாதிக்கின்றனர். ஆனால், அவர்களது அக்கா டாக்டருக்கு படிக்க உதவியதே கேப்டன் விஜயகாந்த் தான். இப்படி வீடு தேடிச் சென்று உதவும் சொக்கத்தங்க மனம் கொண்டவர்தான் இன்று மறைந்த கேப்டன் விஜயகாந்த்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top