விஜய பிரபாகரனுக்கு MLA சீட் + MP சீட்… ஆபரை அள்ளிவீசும் DMK, ADMK… ஆனால் பழசை மனதில் வைத்து கறார் காட்டும் பிரேமலதா…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.  கூட்டணி குறித்து பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.  இதற்கு காரணம், திமுக, அதிமுக என்ற 2 பெரிய கட்சிகளும் விஜய பிரபாகரனுக்கு MLA சீட் என்ற ஆஃபரை முன்வைப்பதாக பேசப்படுகிறது.

ஆனால் முன்னதாக MP சீட் விஷயத்தில் ஏமாற்றம் அடைந்ததை நினைவில் வைத்திருக்கும் பிரேமலதா, எதுவாக இருந்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்கும் படி கேட்டிருக்கிறாராம். அப்படி தரும் கட்சியோடு தான் கூட்டணி என்றும் கூறியிருப்பதாக பேசப்படுகிறது.