ஐபிஎல் 19-வது சீசன் கிரிக்கெட் போட்டியானது அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. மேலும், வீரர்களின் மினி ஏலம் டிச.16ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் CSK அணியைவிட்டு பிரிந்த ஆல்-ரவுண்டர்களான ஜடேஜா குறித்து CSK நிர்வாகம் எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “என்றென்றும் தளபதி” என்று குறிப்பிடபட்டுள்ளது.
மேலும், CSK அணிக்காக ஜடேஜா இதுவரை விளையாடிய 200 போட்டிகளில், 2354 ரன்கள், 152 விக்கெட்டுகள், 94 கேட்சுகள் எடுத்ததையும் நினைவுபடுத்தியுள்ளது. “Yellow வின் துணிச்சலைப் பற்றி வரலாறு பேசும்போது, அது உங்கள் பெயரை எதிரொலிக்கும்” என உருக்கமாக பதிவிட்டுள்ளது.
