சார் அந்த கஞ்சா விஷயம்..! முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்.. நைசாக நழுவிய நயினார்…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பழக்கமானது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் இன்னும் குறைந்த பாடில்லை. கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமங்களிலும் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் பேட்டியளித்தார்.

அப்போது இடைமறித்த செய்தியாளர் ஒருவர், “சார் குஜராத்தில் அதிக கஞ்சா பிடிபட்டுள்ளதே?’ என கேட்க, சற்று பின்வாங்கிய நயினார் நாகேந்திரன், ‘முதலில் இட்லி, தோசை சாப்பிடுங்கள், அப்புறம் சப்பாத்தி சாப்பிடுங்கள்’ என்றார். அதாவது, முதலில் தமிழகத்தை கவனியுங்கள், பிறகு குஜராத்தை பற்றி பேசலாம் என்று கூறி, சந்திப்பை முடித்து கொண்டார்.