தமிழகத்தில் சற்றுமுன் பரபரப்பு…. 50 பேருடன் கவிழ்ந்த அரசுப்பேருந்து… பயணிகளின் நிலை என்ன..?

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முருகானந்தபுரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று   அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது முருகானந்தபுரம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கூடங்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.