Categories: சினிமா

மீனாவின் வேலையை கெடுக்க விஜயா போட்ட மாஸ்டர் பிளான்… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு புது ஆர்டர் கிடைத்துவிட்டது அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவருக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண் மீனாவுக்கு எதிராக விஜயாவை தூண்டிவிடுகிறார். அவரும் அதற்கு சரி என்று கூறி மீனாவை அந்த ஆர்டர் முடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டில் ஆர்டர் கிடைத்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹாஸ்பிடலில் சீதா அந்த போலீஸ்காரர் அம்மாவை பார்த்து கவனித்துக் கொண்டு வருகிறார். அப்போது மீனா போன் செய்து சீதா நாளைக்கு பெரிய ஆடர் இருக்கு நீயும் என் வந்துடு பூ கட்டுற அக்கா எல்லாரையும் கூட்டிட்டு வந்துடு என்று கூறுகிறார்.

அடுத்ததாக முத்துவரிடம் பூ மூட்டை எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன் நீங்க அதை எடுத்து மண்டபத்துல கொண்டு வச்சிருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவுக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண் விஜயாவுக்கு போன் செய்து இன்னைக்கு தான் மீனாவுக்கு பெரிய ஆர்டர் அவளை வெளியே போகாமல் தடுத்து வைங்க அப்பதான் உங்களுக்கு கீழ அவ இருப்பா என்று தூண்டிவிடுகிறார்.

விஜயாவும் மீனாவை எப்படியாவது வீட்டில் இருக்க வைக்க வேண்டும் அதற்கு முதலில் எல்லோரையும் வீட்டை விட்டு கிளம்ப சொல்ல வேண்டும் என்று அனைவரையும் அவசர அவசரமாக சாப்பிட விடாமல் கூட மனோஜ் ரவி அண்ணாமலை எல்லோரையும் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்லும்படி அனுப்பி வைத்து விடுகிறார். இறுதியாக வீட்டில் மீனா மட்டும் தனியாக இருக்கிறார். அப்போது கீழே விழுந்து கையில் அடிபட்ட மாதிரியும் விஜயா கத்திக் கொண்டிருக்கிறார். மீனா ஓடிவந்து என்ன ஆச்சு அத்தை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

மனைவியுடன் சண்டை… பாதாள கால்வாயில் குதித்த கணவன்… நொடியில் எடுத்த விபரீத முடிவு… வெள்ளமென பாயும் கழிவுநீரில் மாயமான வாலிபர்… கால்வாயில் தேடுதல் வேட்டை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…

10 minutes ago

எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க…! அத்துமீறி நுழைந்த கும்பல்… குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை… சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…

24 minutes ago

டேய் எல்லாரும் வாங்கடா…! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள்… இரு தரப்பினர்கள் மோதல்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…

32 minutes ago

கலிகாலத்தின் உச்சம்..! உயிரோடு இருக்கும் ஒருவருக்கு பிண்ட தானமா?… இரண்டு மகன்களும் மரணம்… அடுத்த தலைமுறையை நம்பாத முதியவர்… பின்னணியில் உள்ள கண்ணீர் கதை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…

44 minutes ago

வருங்காலம் இளைஞர்கள் இப்படியா?… தவறை உணரவில்லை… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… காவலர்களிடம் வாக்குவாதம்… சாலையில் பெரும் பரபரப்பு…!!

சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…

53 minutes ago

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

1 மணத்தியாலம் ago