CINEMA
சுற்றி வந்து மறுபடியும் மீனாவின் தலையை உருட்டும் விஜயா… இந்த தடவையும் தப்பித்த ரோகிணி…சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் ரோகிணி விஜயாவிடம் இருந்து தப்பிக்க புதிதாக ஒரு கதையை கட்டுகிறாள். நான் முதலில் கர்ப்பமாக இருந்ததாகவும் என் அப்பா ஜெயிலுக்கு போன அதிர்ச்சி செய்தியை கேட்டதால் எனக்கு அது கலைந்து விட்டது என்று கதை கூறுகிறார். அதையும் விஜயா நம்புகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இனி காண்போம்.
ரோகிணி தொடர்ந்து பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். இந்த தடவையும் புதிதாக ஒரு கதையை சொல்லி தப்பித்து விடுகிறாள். அப்போது விஜயா அவள் சொன்ன கதையும் நம்பி யார் இந்த தகவலை பரப்புனது என்று ஒவ்வொருவரையும் கேட்கிறார். அப்போ அண்ணாமலை எனக்கு முத்து தான் சொன்னான் என்று சொல்கிறார். முத்து எனக்கு ரவி தான் சொன்னான் என்று சொல்கிறான். ரவி சுருதிதான் எனக்கு சொன்னா அப்படின்னு சொல்கிறான். மீனாதான் எனக்கு சொன்னாங்க அப்படின்னு சொல்கிறார் சுருதி. உடனே விஜயாவுக்கு கோபம் தலைக்கேறுகிறது. மீனாவை பிடித்து கண்டபடி திட்டுகிறார் விஜயா. உன்னை யாரு ரோகினி விஷயத்துல தலையிட சொன்னது எப்பவுமே நீ ரோகினி விஷயத்துக்குள்ள வராதன்னு உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்றது. அவங்க வாழ்க்கைக்குள்ள நீ ஏன் புகுந்து பிரச்சனை பண்ற அப்படின்னு சொல்லி மீனாவ கண்டபடி திட்டுகிறார் விஜயா.
அண்ணாமலை குறுக்கிட்டு சும்மா கத்தாத விஜயா. அவ ரோகினி ஹாஸ்பிடலுக்கு வந்ததும் என்னவோ ஏதோனு பதறி கூட விசாரிச்சு இருக்கலாம் இல்லையா. சீதா மீனாவின் தங்கச்சி அப்படிங்கறதால மீனா கிட்ட விஷயத்தை சொல்லி இருக்கா. இத சொல்றதுல என்ன தப்பு இருக்கு. ஒருவேளை ரோகிணிக்கு உடம்பு முடியலன்னு கூட நினைச்சு இருக்கலாம். இதை ஏன் நீ பெருசு படுத்துற இதோட இந்த பிரச்சனையை இதோட விட்டுட்டு ஆளாளுக்கு அவங்க வேலையை போய் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு அண்ணாமலை வெளியே கிளம்பி விடுகிறார். மீனா முத்துவிடம் எப்போ பார்த்தாலும் அத்தை என்னை தான் எந்த பிரச்சினை நடந்தாலும் என் தலையை உருட்டுறாங்க. கடைசில என்னதான் அத்தை திட்டுற மாதிரி ஆகுது. ஏன் இப்படி நடக்குதுன்னு சொல்லி அழுகிறாள். முத்து இதெல்லாம் நீ பெரிய விஷயமே எடுத்துக்காத மீனா. அந்த பார்லர் அம்மாவும் சாதாரண ஆள் கிடையாது. அந்த ஓடு காலி மனோஜும் பார்லர் அம்மாவும் இன்னும் என்னென்ன விஷயம் எல்லாம் மறைச்சிருக்காங்களோ தெரியல அப்படின்னு முத்து சொல்லிட்டு இருக்கிறான். அப்போ ரோகிணி பிரிட்ஜில் தண்ணி எடுக்க வரும்போது அவங்க பேசுறத கேட்கிறாள்.
உடனே ரோகிணி விஜயா கிட்ட போயி ஆன்ட்டி எனக்கு இங்க இருக்கவே புடிக்கல எங்களுக்கான பிரைவசியை இல்ல மீனா எப்ப பார்த்தாலும் எங்க லைப்ல குறுக்க வந்துகிட்டே இருக்காங்க. ஒவ்வொரு தடவையும் நான் பயந்து பயந்து இருக்க முடியாது அப்படின்னு சொல்கிறார். அப்போ விஜயா நீ கவலைப்படாத ரோகிணி அவ எங்க இருந்தா தானே இப்படி பண்ணுவா அவ எல்லாம் ஒரு ஆளே கிடையாது நீ அவளை ஏன் பெருசா நெனச்சுக்குற அப்படின்னு விஜயா கேட்கிறார். அதுக்கு ரோகிணி இல்ல அத்தை நாங்க தனி குடுத்தனம் நாங்க போறோம் இந்த வீட்டை விட்டு நாங்க போயிடுறோம் நாங்க போயிட்டு நிம்மதியா நாங்க இருக்க போறோம் அப்படின்னு சொல்கிறார். அதுக்கு விஜயா அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ரோகிணி நீயும் மனோஜும் சந்தோசமா இருங்க எனக்கு நீங்க சந்தோஷமா இருக்குறது தான் முக்கியம் இவள் எல்லாம் ஒரு ஆளே கிடையாது இவளை நான் பார்த்துக்கிறேன் அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறார் விஜயா.
ரூம்மிற்க்கு வந்ததும் ரோகிணி மனோஜிடம் ஏன் மனோஜ் நம்ம எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது. ஏன் அடுத்தவங்க எல்லாம் நம்ம வாழ்க்கைக்குள்ள வராங்க. எனக்கு இது சுத்தமா பிடிக்கல. நம்ம வீட்டை விட்டு நம்ம தனியா போய் நம்ம வாழலாம் அப்படின்னு ரோகினி சொல்கிறாள். அதுக்கு மனோஜ் இல்ல ரோகிணி அது எப்படி முடியும் அது முடியாது அம்மாவால நான் இல்லாம இருக்க முடியாது என்னாலையும் அம்மாவை பார்க்காமல் இருக்க முடியாது. நான் போயிட்டா அம்மா இங்க தனியா இருந்து எல்லார்கிட்டயும் சிக்கி தவிப்பாங்க. அது வேண்டாம் நீ ஏன் இப்ப இதை பெருசா எடுத்துக்குற முத்து எல்லாம் ஒரு ஆளா முத்து பொண்டாட்டி தான் எல்லா பிரச்சனையும் காரணம் ஆனா அவள் எல்லாம் நீ பெருசாவே எடுத்துக்காத அதான் அம்மா இருக்காங்கல்ல பாத்துக்குவாங்க அப்படின்னு சொல்கிறான் மனோஜ்.
அதுக்கு அப்புறமா மனோஜ் ஆனா உண்மையிலே இன்னைக்கு நடந்த விஷயத்துல நான் ரொம்ப சந்தோசமா தான் இருக்கேன் ரோகிணி. ஏன்னா இவ்வளவு நாள் நமக்கு குழந்தை இல்லன்னு உடனே நம்ம ரெண்டு விதத்துல யாருக்காவது குறை இருக்குமா நினைச்சு பயந்தேன். ஆனா ஏற்கனவே நீ உண்டாயிருக்க உண்டாயி அது கலைஞ்சு போச்சு இதிலிருந்து என்ன தெரியுது நம்ம ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்ல அப்படிங்கறது ப்ரூவ் ஆயிடுச்சு. இன்னும் அடுத்த குழந்தை எப்பவும் பிறக்க போது என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். எனக்கு ரொம்ப ஹேப்பியா தான் நான் இன்னைக்கு இருக்கேன். ஏற்கனவே உனக்கு கர்ப்பம் கலையாம இருந்ததுன்னா நம்ம ஹாஸ்பிடலுக்கு போகலாம். உன்னை நான் கூட்டிட்டு போவேன் எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும் அப்படின்னு சொல்லிட்டு இருக்கான் மனோஜ். அப்போ ரோகிணி மனசுக்குள்ளே ரொம்ப வருத்தப்பட்டு அழுகிறாள் சாரி மனோஜ் நான் உன்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டேன் அப்படின்னு சொல்லி மனசுக்குள்ள வருத்தப்படுறார் ரோகிணி அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.