CINEMA
திருடனை பிடிக்க ஸ்கெட்ச் போடும் ஆனந்தி.. மகேஷின் அப்பாவை தூண்டி விடும் மித்ரா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான சிங்கபெண்ணே சீரியல் புரோமோ..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்க்க மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலை தனுஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தினமும் விறுவிறுப்பான கதைக்களத்தோடு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது செவரக்கோட்டையில் நடைபெறும் திருவிழாவிற்காக அன்பு, ஆனந்தி, மகேஷ், மித்ரா உள்ளிட்டோர் வந்தனர். ஆனந்தி ஊருக்கு வந்த உடனே சுயம்புலிங்கம் அவரை வம்புக்கு இழுத்தார். திருவிழா ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து ஆனந்திக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். கயிறு இழுக்கும் போட்டியில் சுயம்புலிங்கம் வம்புக்கு இழுத்ததால் அன்பும் மகேஷும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
ஆனந்தி தீ மிதிக்கும் போது சுயம்புலிங்கம் சதி செய்து பேனரை கீழே உள்ள செய்கிறார். அப்போது அதிர்ஷ்டவசமாக அன்புவும், மகேஷும் பேனரை பிடித்துக் கொண்டதால் ஆனந்தி அதிலிருந்து தப்பித்து விடுகிறார். அண்ணனை பார்ப்பதற்காக யாரும் இல்லாத நேரத்தில் கோவிலுக்கு சென்ற ஆனந்தி மீது திருட்டு பழி விழுகிறது. ஊரில் உள்ள அனைவரும் ஆனந்தி தான் குற்றவாளி என நினைக்கின்றனர். இன்றைய ப்ரோமோ வெளியானது.
அன்புவும் மகேஷும் வீட்டில் இருந்து ஆனந்தியை தேடுகின்றனர். அப்போது கோகிலா ஆனந்தி இவ்வளவு நேரம் இங்கேதான் இருந்தார். நான் வெளியே சென்று வருவதற்குள் ஆனந்தியை காணவில்லை என கூறுகிறார். இதற்கிடையே மகேஷின் அப்பா ஊரிலிருந்து செல்போன் மூலம் மித்ராவை தொடர்பு கொண்டு கேட்கும் போது மித்ரா மகேஷ் இங்கிருக்கும் பிரச்சினைகள் தான் பார்க்கிறார். அங்கு உள்ள நிலைமை பற்றி யோசிக்கவில்லை. நீங்கள் மகேஷிடம் பேசுங்கள் என கூறி மித்ரா அவரை கோபப்படுத்துகிறார். இதற்கிடையே ஆனந்தி எப்படியாவது கோவில் நகைகளை திருடிய திருடனை பிடித்து தருவேன் என வைராக்கியத்துடன் இருக்கிறார். திருடன் பிடிவானா என்பதை இனிவரும் எபிசோடில்தான் பார்க்க வேண்டும்.