CINEMA
என் கணவர் சுருளி ராஜன் குடிப்பழக்கத்தால் இறக்கவில்லை… பல வருடங்கள் கழித்து உண்மையை சொன்ன மனைவி!
நடிகர் சுருளிராஜன், தமிழ் சினிமாவில் 1970, 80்களில் நிறைய படங்களில் நடித்திருப்பார். மாந்தோப்பு கிளியே என்ற படத்தில் இவரது கஞ்சத்தனம் கேரக்டர் வெகுகாலம் ரசிகர்களால் சிலாகித்து ரசித்து பேசப்பட்டது. மகா கஞ்சனாக அவர் அதில் நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில், வில்லன் ஜெய்சங்கரின் கணக்குப்பிள்ளையாக நடித்திருப்பார். இவர் பேசும் மொழி ரசிக்கும்படியாக இருக்கும்.
மிமிக்ரி கலைஞர்கள் இவரது குரலில் நிச்சயம் பேசுவார்கள். நிறைய வெற்றி படங்களில் சுருளிராஜன் நடித்தவர். மிக குறுகிய காலத்தில், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். சுருளிராஜன், நீண்ட காலம் இருந்த நிறைய படங்களில் நடித்து பேரும் புகழும் அடைய வேண்டியவர், ஆனால், இளம் வயதில் அதாவது 42 வயதிலேயே சுருளிராஜன் இறந்து போனார். அதற்கு முக்கிய காரணம், அவரது மதுப்பழக்கம். பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவரது கால்ஷீட் வேண்டும் என்றால், வெளிநாட்டு மதுபானம் வாங்கிக் கொடுத்தால், உடனே நடிக்க ஒத்துக்கொள்வார்.
அதனால் மிக இளம் வயதிலேயே சுருளி ராஜன் உயிரிழந்தார். அவரின் குடிப்பழக்கம்தான் அவரின் மரணத்துக்குக் காரணம் என்று இன்றுவரை சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் இரண்டு 40 ஆண்டுகள் கழித்து அவரின் மனைவியான முத்துலட்சுமி தற்போது அவரின் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “அவருக்கு அல்சர் இருந்தது. அதனால் சூடான உணவுகளை எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டார். குளிர்ச்சியான உணவுகளையே எப்போதும் எடுத்துக் கொள்வார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அப்போதுதான் அவருக்கு மூலம் இருப்பதே தெரியவந்தது. ஆனால் பத்திரிக்கைகளில் அவர் குடிப்பழக்கத்தால் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
அவருக்கு ஒரு மருந்து தேவைப்பட, அது இந்தியாவில் கிடைக்காமல் வெளிநாட்டில் இருந்து அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் தருவித்துத் தந்தார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்த பின்னர்தான் அவருக்கு மஞ்சள் காமாலை இருந்ததையே மருத்துவர்கள் சொன்னார்கள். சிலருக்கு அதுபோல மஞ்சள் காமாலை இருப்பதே தெரியாமல் இறந்துவிடுவார்களாம்” எனக் கூறியுள்ளார்.