திடீரென சத்தம் இல்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரியங்கா.. வெளியான புது ஜோடியின் புகைப்படம்..!

By Nanthini on சித்திரை 16, 2025

Spread the love

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினிகளை எடுத்துக் கொண்டால் வெகு சிலர் மட்டுமே ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் முக்கிய அங்கமாக இருப்பவர்தான் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே . கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக ரெக்கார்டு படைத்திருக்கும் பிரியங்கா இன்று விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளினியாக இருந்து வருகின்றார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் படம் நிகழ்ச்சிகளையும் விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் பிரியங்கா.

ரகசிய திருமணத்தை முடித்த தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.. புகைப்படங்கள்..

   

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். என்னதான் பிக் பாஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது நெகட்டிவான பல விமர்சனங்களை பெற்றாலும் அந்த சீசனில் ரன்னர் அப் பட்டத்தை பிரியங்கா பெற்றார். பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

என் கல்யாண வாழ்க்கையில் இதுதான் பிரச்சனை; குழந்தை பெத்துக்க ஆசை - மனம்  திறந்த விஜே பிரியங்கா! - தமிழ்நாடு

 

ஆரம்பகாலகட்டத்தில் பிரியங்காவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரவீன் மற்றும் பிரியங்கா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்திருக்கும். ஆனால் சில வருடங்களாக அந்த புகைப்படங்கள் எதுவும் அதில் இல்லை. கடந்த சில வருடங்களாக பிரியங்கா தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இருவரும் பிரிந்து விட்டார்களா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இப்படி பிரியங்கா வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் பிரியங்கா தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளது தற்போது உறுதியாகி உள்ளது. அதாவது பிசியாக தொகுப்பாளினி வேலையை பார்த்து வந்த பிரியங்கா இன்று வெளிநாட்டில் வசி என்ற நபரை சத்தம் இல்லாமல் திருமணம் முடித்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.