யார் அழைப்பையுமே எடுக்காத ஸ்ரீ தினமும் தவறாமல் ஒருத்தர் கிட்ட மட்டும் பேசுறாராம்.. அவங்க யார் தெரியுமா..?

By Nanthini on சித்திரை 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்தான் ஸ்ரீராம். ஸ்ரீராம் நடராஜன் என்பதுதான் இவருடைய முழு பெயர். சினிமாவுக்காக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அந்தத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

நடிகர் ஸ்ரீ வாழ்க்கையில் நடந்தது இதுதான்..! அந்த வேலை கேட்டு போன்  பண்ணுனார்.. பிரபலம் உருக்கம் | Actor Sri's Friend Dorothy David Opens Up  About His Life Struggles - Tamil ...

   

இதனை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 /9 திரைப்படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சோன்பப்படி, வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் வில்லம்பு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கிக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர்.

   

மாநகரம் நடிகர் ஸ்ரீ மலையாள நடிகையுடன் திருமணமா? வைரலாகும் போட்டோ

 

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் சமீப காலமாக இவரைப் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஸ்ரீ: 'அவனோட நிர்வாண வீடியோவ பார்த்தப்ப.. ஸ்ரீக்கு இந்த நோய்தான்  மாத்திரைய நிப்பாட்டுனா' -நடிகர் ஸ்ரீ தோழிபேட்டி!

கடந்த சில மாதங்களாகவே இவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதுவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ மூலமாகத்தான் இவருடைய தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருக்கின்றார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கூட இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தான் கூறி வருகின்றனர். மறுபக்கம் வில்லம்பு திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்திருந்தார்.

எங்கே இருக்கிறார் நடிகர் ஸ்ரீ? ….. செல்போனில் தொடர்பு கொண்ட லோகேஷ் கனகராஜ்!

தற்போது ஸ்ரீ எங்கு இருக்கிறார் என்று அனைவருமே தேட தொடங்கி விட்டனர். அதேசமயம் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து நடிகர் ஸ்ரீயை தொடர்பு கொண்டு வருகின்றாராம். ஆனால் அவருடைய அழைப்பை ஸ்ரீ இதுவரை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. யாருடைய அழைப்பையும் எடுக்காத ஸ்ரீ நாள்தோறும் தவறாமல் தன்னுடைய அம்மாவுக்கு மட்டும் தொலைபேசி மூலமாக அழைக்கிறாராம். அவரும் நீ எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய் என்று கேட்டதும் எந்த பதிலும் கூறாமல் தன் அம்மாவின் குரலை கேட்டதும் போனை கட் பண்ணி விடுகிறார். குடும்பத்தில் மீதும் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஸ்ரீ அக்கறை கொண்டவராகவும் அன்பு கொண்டவராகவும் தான் இருந்திருக்கிறார். அப்படி இருப்பவர் இந்த நிலைமைக்கு ஆளானது பல பேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.