தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஜனனி ஐயர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் களமிறங்கினார்.

அப்போதுதான் இவருக்கு விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் இவர் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் ஜனனி ஐயர் என்று அழைக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு தன்னுடைய பெயரிலிருந்து ஐயர் என்பதை நீக்கி ஜனனி என்று மாற்றிக் கொண்டார். ஆரம்பத்தில் 150 க்கும் அதிகமான விளம்பரங்களில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் தான் இவருக்கு திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அந்த படம் பெரிய அளவில் இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை. அதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகுதான் அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்தத் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது. இதனைத் தொடர்ந்து பாகன், தெகிடி, ஏழாம் நாள், அதே கண்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இப்போதும் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஜனனி தமிழை தாண்டி மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இப்படியான நிலையில் ஜனனிக்கு சாய் ரோஷன் ஷாம் என்ற நபருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்களை ஜனனி பகிர்ந்துள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

