ஹீரோக்களை விட அதிக சம்பளம்.. ஒட்டுமொத்த சினிமாவையும் ஆட்டம் காண வைத்த நடிகை.. ஒரே முடிவால் வாழ்க்கை மாறிய சோகம்..!

By Nanthini on சித்திரை 17, 2025

Spread the love

பொதுவாகவே சினிமாவில் நடிகர்களை விடவும் நடிகைகள் குறைவாகத்தான் சம்பளம் பெறுகிறார்கள் என்ற கருத்து உள்ளது. இது குறித்து எண்ணற்ற விவாதங்களும் நடந்து உள்ளன. 90 காலகட்டத்தில் நடுப்பகுதியில் நடிகை ஒரு நட்சத்திரமாக ஆனார். ஆனால் தனது தோற்றம் மற்றும் நடிப்பால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆண் நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அவர்தான் ரங்கீலா படத்தில் நடித்த மிகப் பெரும் வரவேற்பை பெற்ற நடிகை ஊர்மிளா. சேகர் கபூரின் மாசூம் 1983 படத்தில் தன்னுடைய ஒன்பது வயதில் நடித்ததன் மூலம் ஊர்மிளா அறிமுகமானார். ஒரு நடிகையாக அவருடைய முதல் முன்னணி வேடம் மலையாள திரைப்படமான சாணக்யா என்ற படத்தில் தான் வழங்கப்பட்டது.After coming into films, the first girl to have an impact on me was Urmila:  RGV speaks out! | After coming into films, the first girl to have an impact  on me

1991 ஆம் ஆண்டு வெளியான நரசிம்மா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். நரசிம்மா திரைப்படத்துக்கு பிறகு ஊர்மிளா மற்றொரு வெற்றி படமான மிராக்கிள் என்ற படத்தில் பணியாற்றினார். ஆனால் அதனைத் தொடர்ந்து ஸ்ரீமான் ஆஷிக் மற்றும் டெபார்டி போன்ற தோல்வி படங்கள் வந்தது. ரங்கீலா வரும் வரை ஊர்மிளா தனது அடுத்த பெரிய வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். அவ்வாறு 1995 ஆம் ஆண்டு ரங்கீலாவில் மிலி என்ற கதாபாத்திரத்தில் ஊர்மிளாவுக்கு திருப்புமுனை ஏற்பட்டது.

   

போதை மருந்து பிறப்பிடமே உங்க ஸ்டேட் ஹிமாச்சல்தான்..கங்கனா ரனாவத் மீது நடிகை  ஊர்மிளா கடும் பாய்ச்சல்! | Urmila Matonkar attacks Kangana Ranaut on Drugs  issue - Tamil ...

   

ஊர்மிளாவின் கவர்ச்சியான தோற்றமும் அற்புதமான நடிப்பும் அவரை ஒரே இரவில் ஒரு நட்சத்திரமாக மாற்றியது. இந்தப் படத்திற்குப் பிறகு ஊர்மிளா இந்தியன், ஜூடாய், கவுன், தீவாங்கி, பூத் உள்ளிட்ட பேக் டு பேக் ஹீட் படங்களில் இடம்பெற்று இருந்தார். ஊர்மிளாவின் உச்சகட்ட சம்பளம் நடிகர்களை விட மிக அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. அவருடைய வலுவான திரைப்படவியல் அவரது சம்பளத்தை பேரம் பேசும் சக்தியை அவருக்கு வழங்கியது. 2000 ஆம் காலகட்டத்தில் நடுப்பகுதியில் ஊர்மிளா சில தவறான தேர்வுகளை செய்தார். அவற்றில் ஏக் ஹசினா தி, நைனா, பஸ் ஏக் பால், கர்ஸ் மற்றும் EMI போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது.

 

Urmila Matondkar Divorce: 10 வயது குறைவான மாப்பிள்ளை.. இந்தியன் பட நடிகை  ஊர்மிளா திடீர் விவாகரத்து! | Actress Urmila Matondkar Divorce shocks  Bollywood fans - Tamil Filmibeat

இந்த படங்கள் அவருடைய வாழ்க்கையை பெரிதும் பாதித்தன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ராம் கோபால் வர்மாவுடன் ஊர்மிளா காதலில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. திரைப்பட தயாரிப்பாளர் ஆர் ஜிவி உடனான அவரது நெருங்கிய உறவு என்று கூறப்படும் விவகாரமும் அவருடைய வாழ்க்கையை கணிசமாக பாதித்தது. மேலும் அவருடன் முதன்மையாக பணியாற்றுவதில் அவர் கவனம் செலுத்தியதால் மற்ற திரைப்பட தயாரிப்பாளர்களை சந்திக்க அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் குறைந்து விட்டன என்று கூறப்படுகின்றது.

ஊர்மிளா மடோண்த்கர் - தமிழ் விக்கிப்பீடியா

 

 

பிறகு வர்மா உடனான விரிசலை தொடர்ந்து ஊர்மிளாவின் வாழ்க்கை மேலும் பாதிக்கப்பட்டது. ஊர்மிளா தனது காதல் வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டில் அவர் தன்னைவிட 10 வயது மூத்தவரான காஷ்மீர் மாடலும் தொழிலதிபருமான முஹ்சின் அக்தர் மிரை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் எட்டு வருட வாழ்க்கைக்கு பிறகு அவர் 2024ஆம் ஆண்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். தற்போது 51 வயதாகும் ஊர்மிளா தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார். பத்து வயதிலேயே சினிமாவில் நுழைந்து ஒட்டுமொத்த சினிமாவையும் ஆட்டம் காண வைத்த நடிகை ஊர்மிளாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமும் மறைந்திருக்கிறது.