பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது. டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்து சில சீரியல்கள் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றன. அதன்படி தற்போது ஹிட் சீரியல் ஒன்றை முடிப்பதற்காக கதையை அவசர அவசரமாக கொண்டு வருகிறார்கள். அதாவது இந்த சீரியல் ஒளிபரப்பாகிய கிட்டத்தட்ட 775 எபிசோடு தாண்டி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலின் கதை தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை தன்னுடைய அம்மா யார் என்று தெரியாமல் இருந்த கௌதமுக்கு ரேவதி தான் உண்மையான அம்மா என்று தெரிந்து விட்டது. அடுத்ததாக தன்னுடைய அப்பா யார் என்று ரேவதி அம்மாவிடம் கௌதம் கேள்வி கேட்கின்றார். ஆனால் ரேவதி அப்பா யார் என்று உண்மையை சொல்லாமல் இருப்பதால் கௌதம் ஜானுவிடம் கேட்கின்றார். ஆனால் ஜானு மற்றும் பைரவிக்கு கௌதமியின் அப்பா யார் என்பது தெரியாது.

இருந்தாலும் கௌதம் கண்டுபிடிப்பதற்கு முன்பை இலக்கியா கண்டுபிடித்துவிட்டார். அதன்படி இன்னும் கூடிய விரைவில் எஸ் எஸ் கே தான் கௌதமியின் அப்பா என்ற உண்மை அனைவருக்கும் தெரிய போகிறது. இடையில் கதை சற்று தட்டு தடுமாறினாலும் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால் கதை கொஞ்சம் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தை முடித்துவிட்டு இதற்கு பதிலாக சாந்தி நிலையம் என்ற சீரியல் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
