இதனால தான் 20 வருஷமா பெரிய ஹீரோ பக்கமே நான் போகல.. மேடையில் ஓபனாக பேசிய இயக்குனர் சுந்தர் சி..!

By Nanthini on சித்திரை 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்தான் சுந்தர் சி. கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை தான் இயக்கிய திரைப்படங்கள் மூலம் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் பிசியான நடிகராகவும் சுந்தர் சி பட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுந்தர்சி முறைமாமன் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். 1995ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. காமெடி, ஆக்சன், சென்டிமெண்ட் மற்றும் டிராமா என எல்லாம் சேர்ந்த ஒரு கலவையான திரைப்படத்தை கொடுத்தார்.

சுந்தர்.சி பிறந்தநாள் ஸ்பெஷல் | திரையரங்குகளை சிரிப்பலையால் குலுங்கவைத்த 10  படங்கள்! | 10 Movies That Made Us Happy With Director Sunder C Acting And  Driving: A Look - hindutamil.in

   

இதன்மூலம் தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு சிறப்பான கமர்சியல் இயக்குனர் கிடைத்துவிட்டார் என்று ரசிகர்கள் இவரை கொண்டாடினர். என்னதான் இவருடைய படங்கள் விமர்சன ரீதியாக முன்பின் இருந்தாலும் ரசிகர்கள் ரசிக்கும் படியே இருக்கும். குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை ஈட்டி கொடுத்த படமாக இது இருக்கும். விமர்சன ரீதியாக இவரின் சுமாரான திரைப்படங்கள் கூட தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக அமைந்திருக்கும். மிக இளம் வயதிலேயே ரஜினியை இயக்கிய பெருமை, கமலை வைத்து அன்பே சிவம் போன்ற ஒரு படைப்பை கொடுத்த பெருமை என பல பெருமைகளுக்கு சுந்தர் சி சொந்தக்காரராக உள்ளார்.

   

Album - சுந்தர்.சி - வடிவேலுவின் 'கேங்கர்ஸ்' - ஆல்பம் | sundar c vadivelu  movie gangers

 

 

இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் அடுத்த வாரம் கேங்கர்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தின் மூலம் சுந்தர் சி மற்றும் வடிவேலு காம்போ இணைகின்றது. இதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

sundar c:பெரிய ஹீரோ பக்கமே போறது இல்ல..ஏன் தெரியுமா ? ஓபனாக பேசிய சுந்தர் சி

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அந்த நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, கடந்த 20 வருடங்களாக பெரிய ஹீரோ பக்கமே நான் போறதில்லை. அதற்கு காரணம் நமக்கு புடிச்ச மாதிரி சுயமா ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமாவில் மொத்தம் மூன்று டைப் இயக்குனர்கள் இருக்காங்க. ஒன்னு அவங்களுக்கு புடிச்ச மாதிரி படம் எடுப்பது, அடுத்து மக்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பது, கடைசியாக ஹீரோவிற்காக படம் எடுப்பது. இந்த வரிசையில் நான் இரண்டாவது ரகம். மக்களுக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பது தான் எனக்கு பிடிக்கும் என்று சுந்தர் சி அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.3