80 காலகட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் மாதவி. அப்போதே பான் இந்தியா நடிகையாக தான் வளம் வந்தார். புதிய தோரணங்கள் திரைப்படத்தின் மூலம் 1979 ஆம் ஆண்டு தமிழில் நடிகையாக அறிமுகமானவர்தான் மாதவி. முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது.
அதன்படி வீர பெண், எங்க ஊரு கண்ணகி, சிவாஜி கணேசனின் அமர காவியம் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ரஜினியுடன் தில்லுமுல்லு திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். கமலுடன் டிக் டிக் டிக் திரைப்படத்தில் கவர்ச்சி புயலாக நடித்த நடிகை மாதவி ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு திரைப்படத்தில் திமிர் பிடித்த பணக்கார வீட்டு பெண்ணாகவும் அதன் பிறகு ரஜினிகாந்தின் காதலில் விழுந்த பிறகு காதல் தேவதையாகவும் நடித்திருப்பார்.
ரஜினிகாந்த் அவரது காதலுக்காக உருகி காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில் என பாடிய பாட்டு இன்றளவும் காதலர்கள் மத்தியில் பேவரைட் பாடலாக உள்ளது. நிரபராதி, காக்கி சட்டை, விடுதலை மற்றும் அதிசய பிறவி உள்ளிட்ட படங்களில் நடித்த மாதவி அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை. கடந்த 1996 ஆம் ஆண்டு ரால்ப் ஷர்மா எனும் அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய மாதவி குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மாதவிக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மூன்று பேருமே மாதவியின் அழகை மிஞ்சும் அளவுக்கு ஹீரோயினி ரேஞ்சுக்கு உள்ளனர். தற்போது மாதவியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வர அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவியா இது அவருக்கு இவ்வளவு அழகான மகள்களாய் என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.