பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். வசூல் கிங்காக அவருடைய சமீபத்திய திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படியான நிலையில் ஷாருக்கான் குடும்பம் வாடகை வீட்டில் குடியேறிய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மும்பையிலையே புகழ்பெற்ற இல்லம் என்றால் மன்னத் இல்லம் தான். ஷாருக்கான் வசிக்கும் அந்த இல்லத்தில் அவரை காண தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் எப்போதுமே கூடுவார்கள். அந்த இல்லத்தில் ரசிகர்கள் முன்பு ஷாருக் கான் தன்னுடைய பேமஸான போஸ் கொடுத்து அடிக்கடி நிற்கும் காட்சிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும்.

இதனால் மும்பையிலையே புகழ்பெற்ற இல்லம் ஷாருக்கான் வசிக்கும் இல்லம் தான். இந்த இல்லத்தில் இருந்து தற்போது ஷாருக்கான் குடும்பம் வெளியேறியுள்ளது. தற்போது மும்பையின் பாந்த்ரா பகுதியில் பாலி ஹில் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பில் ஷாருக்கான் குடும்பம் வாடகைக்கு வசித்து வருகின்றது. அடுத்த இரண்டு வருடங்களுக்கு இந்த வீடு தான் ஷாருக்கானின் தற்காலிக வீடாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஷாருக்கானின் மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்தினர் அனைவரும் இந்த கட்டிடத்தை நான்கு தலங்களில் வசிக்கின்றனர். அவர்களுடன் அவர்களின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை தங்க வைக்கும் வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தலங்களுக்கான மொத்த வாடகை மட்டும் மாதத்திற்கு 24 லட்சம் என்று கூறப்படுகிறது. திடீரென்று புதிய வீட்டுக்கு அதுவும் வாடகை வீட்டில் ஷாருக்கான் குடியேற என்ன காரணம் என்றால் சாருக்கான் வசித்து வந்த மன்னத் இல்லத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளதாம்.

புதுப்பிப்பு பணிகள் மே மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த வீட்டை பராமரிப்பு செய்ய தேவைப்படும் என்பதால் வாடகை வீட்டுக்கு ஷாருக்கானின் குடும்பம் குடியேறியுள்ளது. ஷாருக்கானின் மகன் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நிலையில் அவரின் குடும்பம் பாரம்பரிய வீட்டை விட்டு புது வீட்டுக்கு குடியேறி இருப்பது தற்போது ஒரு பரபரப்பான செய்தியாக உள்ளது.
