இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் முதலிடத்தில் இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவுக்கு சின்னத்திரையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. மக்கள் திரைப்படங்களுக்கு கொடுக்கும் வரவேற்பை சீரியல்களுக்கும் கொடுத்து வருகிறார்கள். தமிழில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என பல தொலைக்காட்சிகளில் தினம்தோறும் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.

வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது பொழுதுபோக்கிற்காக சீரியல்கள் பார்த்து வருகிறார்கள். சீரியலுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரேம் டைம் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
இதனால் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் ஒன் இடம் சன் டிவியில் இருக்கும் சீரியலுக்கு தான் கிடைக்கும். ஒரு சில சமயங்களில் விஜய் டிவியில் இருக்கும் சீரியலுக்கு கிடைக்கும். கடந்த வாரத்திற்கான டிஆர்பி-யில் சன் டிவி தொடர்களை முறியடித்து தற்போது விஜய் டிவி சீரியல் நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கின்றது.

ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தான் 8.38 மதிப்பெண் பெற்று டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்திருக்கின்றது. பல வாரங்களாக முதலிடத்தில் இருந்த சன் டிவியின் சிங்க பெண்ணே தொடர் 8.27 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
