இந்தியன் 2 திரைப்படத்திற்கு தாத்தா கேட்டப்பில் குதிரை ஒன்றில் கூல் சுரேஷ் என்ட்ரி கொடுத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மூன்று வருடங்கள் காத்திருந்தார்கள். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கின்றார்.

மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பல பிரச்சனைகள், சர்ச்சைகள் என இந்த திரைப்படம் எடுத்து முடிப்பதற்கு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது . மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 9 மணிக்கு தமிழகம் முழுவதும் இப்படம் வெளியாகியிருந்தது.
இன்று ஒரு நாள் மட்டும் ஐந்து சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கின்றது. இந்தியன் 2 திரைப்படம் காலை வெளியானது முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும் ட்விட்டரிலும் இப்படத்தின் தொடர்பான விமர்சனங்கள் பாசிட்டிவாக இருந்து வருகின்றது. விண்டேஜ் ஷங்கர் மீண்டும் வந்துவிட்டார்.

கமலஹாசனை இப்படி பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது என்று தொடர்ந்து பலரும் தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சர்ச்சைக்கு பேர் போன கூல் சுரேஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கிற்கு இந்தியன் தாத்தா வேடமணிந்து தேசிய கொடியுடன் குதிரையில் சவாரி செய்த படி வந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இந்தியன் தாத்தா மிரள விடுகிறாரோ இல்லையோ ஒவ்வொரு படத்திலும் நீங்கள் மிரள வைக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
#WATCH | Tamil Nadu: A fan of actor Kamal Haasan arrives at a film theatre in Chennai to watch 'Indian 2', dressed up as the actor's character from the film. pic.twitter.com/xRmnLkjzNN
— ANI (@ANI) July 12, 2024
