பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான சுழியம் என்ற சீரியல் மூலம் தனது திரைப்படத்தை ஆரம்பித்தவர் சூசன் ஜார்ஜ். கேரளாவை பூர்வீகமாக கொண்ட சூசன் ஜார்ஜ் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசுபவர். இவர் தென்றல், ஆபீஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரது வில்லத்தனமான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் நடிக்க சூசனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் மைனா திரைப்படத்தில் ஜெயிலர் மனைவியாக சூசன் ஜார்ஜ் நடித்திருப்பார். அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும். எப்போ வரீங்க எப்ப வரீங்க என்ற டயலாக் இன்று வரை பேமஸ் ஆக உள்ளது.
வெள்ளித்திரைகளிலும் சூசன் ஜார்ஜ் வில்லியாக களமிறங்கினார். இதனையடுத்து நர்த்தகி, பேச்சியக்கா மருமகன், ரட்சகன், ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் சூசன் ஜார்ஜ் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு வெள்ளி திரையில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அவருக்கு பல்வேறு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் சினிமாவை விட்டு அவர் விலகி விட்டார். மைனா பட பிரபலம் சூசன் என்ன ஆனார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். அவர் குடும்பம் கணவர் குழந்தை என செட்டி ஆகிவிட்டார். இந்த நிலையில் சூசன் ஜார்ஜ் தனது மகனுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதனை பார்த்த ரசிகர்கள் சூசன் சார்ஜுக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகின்றனர்.